டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவை: இன்று பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்

Feb 11, 2019 09:39 AM 77

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்று கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரல் வரையும், விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., நிலையத்தில் இருந்து, வண்ணாரப்பேட்டை வரை, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, மெட்ரோ ரயிலில் இன்று இரவுவரை பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் போக்குவரத்தில், விமான நிலையத்தில் இருந்து, கோயம்பேடு வழியாக, வண்ணாரப்பேட்டைக்கும், விமான நிலையத்தில் இருந்து, சைதாப்பேட்டை வழியாக வண்ணாரப்பேட்டைக்கும், இரு வழிகளிலும் இலவச பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted