தீப ஒளி திருநாள் - கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

Nov 03, 2018 07:02 AM 192

தீப ஒளி திருநாள் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

வருகிற 6-ம் தேதி தீப ஒளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்லும் பயணிகள் குடும்பத்தினருடன் கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

வெளியூர் பொதுமக்களின் இன்னல்களை குறைக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மட்டுமின்றி பெருங்களத்தூர், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் எந்த பேருந்து எந்த நடைமேடையில் இருக்கிறது. அவை எங்கு செல்கிறது என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்ப்பதற்காக அனைத்து நடைமேடைகளிலும் விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளன.

Comment

Successfully posted