திமுக முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டம்: பொதுமக்கள் அவதி

Jan 13, 2020 05:36 PM 734

திமுக முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அத்துமீறி வைக்கப்பட்ட பேனர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஒன்று அரை மணி நேத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் 66வது பிறந்தநாள்  விழா நடைபெற்றது. இதற்காக   கடைகளுக்கு முன்பு  பெரியசாமியை வாழ்த்தி தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருந்த  பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.மேலும், திமுகவினர் சாலைகளில் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்ததில் வத்தலகுண்டு, தேனி, திண்டுக்கல், மதுரை செல்லும் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக  போக்குவரத்து  பாதிக்கப்பட்டதுடன், ஆம்புலன்ஸ் ஒன்றும் மாட்டிக்கொண்டது. அதை கண்டுகொள்ளாமல்,    திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி  ஊர்வலம் வேறு நடத்தியது  பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது .

Comment

Successfully posted