பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல்

Nov 12, 2019 03:14 PM 322

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இரண்டாவது முறையாக பரோலில் வெளிவந்துள்ளார்.

பேரறிவாளனின் தந்தை உடல்நலத்தை பாதுகாக்கவும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் தனது மகன் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டி அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதனடிப்படையில் பேரறிவாளன் இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வேலூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு பேரறிவாளன் சென்றார். பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கும், அவரது வீட்டைச் சுற்றியும் பலத்த பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted