சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

Apr 08, 2021 08:39 AM 637

பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி கோவில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, நாளை முதல் 12ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Comment

Successfully posted