அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி!!

Jul 06, 2020 01:26 PM 57

தமிழகத்தில் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50% அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேர்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இந்நிலையில், வரும் 31-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted