ஈரோட்டில் பிட்காயின் மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்கள்

Jan 28, 2020 01:27 PM 351

ஈரோட்டில் பிட் காயின் மற்றும் ஆன்லைன் வியாபாரம் மூலம் மூன்று மடங்கு லாபம் தருவதாக கூறி பல கோடி ருபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன், இளையராஜா, கோடீஸ்வரன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் அடங்கிய நபர்கள் KAS குரூப் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனம்  சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் செயல்பட்டுவந்தன... இந்த நிறுவனம் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்தால், இருமடங்காக பணம் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டதாக  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள்  புகார் அளித்தனர்.

அதன்படி சுமார் 1800 பேரிடம்  14 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றியதாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன், இளையராஜா, கோடீஸ்வரன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் மீது  ஆத்தூரை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

 எப்படி நடந்தது இந்த ஆன்லைன் மோசடி  ஒவ்வொருவரும் தங்களுக்கு கீழ் ஆட்களை சேர்த்தால் அவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி இந்த மோசடி திட்டத்தில் ஆட்களை சேர்த்துள்ளனர்.

 இப்படி  2018 ஜூன் மாதம் முதல் 2019 ஜூன் வரை ஓராண்டில் இந்த மோசடியை அரங்கேற்றியதாகவும், தங்களை போல் 3000க்கும் மேற்பட்டோரிடம் பல நூறு கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்த்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றிய அவர்கள்  நடவடிக்கை எடுத்து தங்களின் பணத்தையும் தங்களை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்களின் பணத்தையும் மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் முகவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted