ஜெகன்மோகன்ரெட்டியைக் கண்டித்து எருமை மாட்டிற்கு கோரிக்கை மனு வழங்கி எதிர்ப்பு

Jan 13, 2020 09:01 PM 670

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியைக் கண்டித்து எருமை மாட்டிற்கு கோரிக்கை மனு வழங்கும் நூதனப் போராட்டத்தில் இந்தியக் குடியரசுக் கட்சியினர் ஈடுபட்டனர்

ஆந்திராவில் 3 தலைநகரங்களை அமைப்பதற்கான முயற்சியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஈடுபட்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கண்டுகொள்ளததால் எருமை மாட்டிற்கு கோரிக்கை மனு வழங்கும் நூதனப் போராட்டம்  நடத்தப்பட்டது. இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனுவை எருமை மாட்டிடம் வழங்கினர். மேலும் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவை ஜெகன்மோகன் ரெட்டி கைவிட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Comment

Successfully posted