ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

Jan 11, 2022 04:46 PM 3645

கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில் வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை விழாக் காலங்களில் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Comment

Successfully posted