தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Dec 10, 2019 02:03 PM 530

மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்து தொடர்பான அவசரச் சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் மாதம், தமிழக அரசு, அவசர சட்டம் பிறப்பித்தது.

இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தில், சட்டப்பூர்வ தவறுகள் ஏதும் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்து தொடர்பான அவசரச் சட்டம் செல்லும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted