நாளுக்கு நாள் உச்சம் தொடும் பெட்ரோல், டீசல் விலை

Jun 01, 2021 11:01 AM 4173

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை, இதுவரை இல்லாத அளவாக 90 ரூபாயை தாண்டியுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 99 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 12 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது.

ஊரடங்கு நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கால் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் விற்கப்படும் நிலையில், டீசல் விலை உயர்வால், காய்கறி, மளிகை பொருட்கள் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Comment

Successfully posted