பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்ந்து விற்பனை

May 05, 2021 10:10 AM 427

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்ந்து விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

image

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 70 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து, 86 ரூபாய் 9 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.

Comment

Successfully posted