விருத்தாச்சலம் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Feb 26, 2020 01:28 PM 675

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலியில் என்.எல்.சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன். இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது நள்ளிரவில், மர்ம நபர்கள் மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பு வீசிட்டு சென்றுள்ளனர்.

இதில் பலத்த சத்தத்துடன் பெட்ரோல் குண்டுகள் வெடிக்கப்பட்டதில், கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரனின் வீட்டு மாடியில் தங்கியிருந்த நிறுனத்தின் பயிற்சி இளைஞர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்த இளைஞர்கள் இதனை செய்திருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

Comment

Successfully posted