பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு !

Oct 16, 2018 09:58 AM 886

பெட்ரோலிய நிறுவன உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், கலால் வரியை மத்திய அரசு குறைத்த போதும் உரிய பலன் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் உயர்த்தி உள்ளன.  அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 86 ரூபாய் 10 காசுகளுக்கும், டீசல் 24 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 4 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோலிய நிறுவன உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில், விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted