தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு

Dec 27, 2019 10:59 AM 403

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கத் தலைவராக இருந்த சோமநாதன், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டதால், புதிய தலைவராக பணீந்திர ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் செயலாளராக எம்.எஸ். சண்முகம் மற்றும் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பணீந்திர ரெட்டி, தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக பணியாற்றி வருகிறார்.

Comment

Successfully posted