முதலமைச்சரின் 2ஆம் கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம்

Mar 25, 2019 06:26 AM 220

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 2ஆம் கட்ட தேர்தல் சுற்றுப்பயண தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று சென்னை ராயபுரம் முதல் துறைமுகம் வரை, சென்னை வடக்கு நாடாளுமன்ற வேட்பாளர் மோகன் ராஜ்க்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். அப்போது முதலமைச்சர் சென்னை ராயபுரம் கல்மண்டபம், காசிமேடு, திரு.வி.க.நகர் ஓட்டேரி பாலம் ஆகிய இடங்களில் உரைநிகழ்த்துகிறார்.

வரும் 26ஆம் தேதி திருவல்லிக்கேணி முதல் கோடம்பாக்கம் வரை, சென்னை தெற்கு வேட்பாளர் ஜெயர்வர்தனுக்கும் , சென்னை மத்திய தொகுதி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாகவும் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். அப்போது சிந்தாதிரிபேட்டை, சி.எம்.டி.ஏ.காலனி, தியாகராய நகர், கோடம்பாக்கத்தில் முதலமைச்சர் திறந்தவேனில் இருந்து பிரசாரம் செய்கிறார்.

அதேபோல் வரும் 27ஆம் தேதி, சென்னை சோளிங்கநல்லூரில் இருந்து செங்குன்றம் பஜார் வரை, சென்னை தெற்கு தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன், காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் வைத்தியலிங்கம், திருவள்ளூர் வேட்பாளர் வேணுகோபால் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். அப்போது சோளிங்கநல்லூர், மாமல்லபுரம், தாம்பரம், போரூர், பூந்தமல்லி பஜார்,ஆவடி பஜார்,அம்பத்தூர்,செங்குன்றம் பஜார் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

Comment

Successfully posted