பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்து; 29 பேர் உயிரிழப்பு

Jul 04, 2021 06:58 PM 1857

பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான சி-130 ரக விமானம் 92 பயணிகளுடன் பிலிப்பைன்ஸிலிருந்து ஜோலோவுக்கு சென்றுகொண்டிருந்த விமானம், தளத்தின் ஓடுபாதையில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாதில் 29 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு ராணுவ வீரர்கள் சி-130 ரக ராணுவ விமானத்தில் வந்தனர்.

image

விமானம் ஜோலோ தீவில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும், தரையிறங்கும் முயற்சியின்போது ஓடுபாதையில் இருந்து விலகி சிறிது தூரத்திற்கு சென்று தரையில் மோதியதாக கூறப்படுகிறது.

மோதிய வேகத்தில் விமானம் உடைந்து தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 29 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 50 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

image

இதனிடையே, 17 பேரை காணவில்லை என்ற நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted