உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் தேர்வான 632 பேருக்கு 4வாரத்தில் பணிநியமன ஆணை வழங்கவும் உத்தரவு

Feb 12, 2019 09:24 PM 314

உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற 632 பேருக்கு 4 வாரத்தில் பணிநியமன ஆணை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்யகோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தேர்வு பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த செல்வம் என்பவர் தொடர்ந்த வழக்கில், தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட 632 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comment

Successfully posted