முன்மாதிரியாக ரஜினிகாந்த் விளங்குவதாக பியர் கிரில்ஸ் புகழாரம்!

Mar 21, 2020 03:34 PM 2033

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "மேன் வெர்சஸ் வைல்ட்" என்ற சாகச நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து கடந்தாண்டு பிரதமர் மோடி கலந்துக்கொண்டார். இவரை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ரஜினிகாந்த் பங்கேற்ற "மேன் வெர்சஸ் வைல்ட்" நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி இரவு 8மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதன் முன்னோட்ட காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் தண்ணீர் பிரச்னை, நடத்துநராக இருந்து நடிகராக மாறியது உள்ளிட்டவை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

Comment

Successfully posted