உதயநிதிக்காக ஓரங்கப்பட்ட முன்னோடிகள்: பிரதமர் மோடி

Mar 31, 2021 06:51 AM 808

திமுகவின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி பட்டத்து இளவரசராக உதயநிதி உருவெடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கத்துடன் தனது உரையை தொடங்கினார். தேசிய ஜனநாயக கூட்டணி, வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைப்பதாக கூறிய பிரதமர் மோடி, ஆனால் காங்கிரஸ், திமுக கூட்டணியோ குடும்ப வாரிசு அரசியல் திட்டங்களை முன்வைப்பதாக சாடினார்.

பெண்களை அவமானப்படுத்துவதே திமுக, காங்கிரஸ் கூட்டணியின் கலாசாரமாக உள்ளது என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, பெண்களைப் பற்றி திண்டுக்கல் லியோனி அருவருக்கத்தக்க வகையில் பேசியதை சுட்டிக்காட்டினார். திமுகவின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, பட்டத்து இளவரசராக உருவெடுத்துள்ள உதயநிதியும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிவருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆனால் திமுக இவர்களை ஒருபோதும் கண்டிப்பதில்லை என குற்றம்சாட்டினார்.

தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டை உற்பத்தி கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.Comment

Successfully posted