பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்துவது குறித்து ஆலோசனை : அமைச்சர் தங்கமணி

Nov 09, 2019 06:32 AM 166

மின் நுகர்வோருக்கு பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் முறை குறித்து மின்சார வாரியம் ஆலோசனை செய்து வருவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், தண்ணீர்பந்தல்பாளையம், படைவீடு ஆகிய இடங்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மின் துறை அமைச்சர் தங்கமணி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு பயனாளிகளுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் திருமண நிதி உதவிகள், கல்வி உதவித் தொகைகள், உழைக்கும் மகளிர்க்கு அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இது போன்று மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மின் நுகர்வோருக்கு பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் முறை குறித்து மின்சார வாரியம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted