தமிழகத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது- அமைச்சர் கே.சி.கருப்பணன்

Jan 24, 2020 07:16 AM 295

தமிழகத்தை பொறுத்தவரை பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்...

தமிழகமெங்கும், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசு தற்போது மக்களுக்கு உண்டான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 100சதவிகிதம் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted