ஏடிஎம் கொள்ளையனை பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் நேரில் பாராட்டு

Nov 03, 2018 08:05 AM 637

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை, காவல்துறையில் பிடித்துக் கொடுத்த பெண்ணை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டினார்.

ஆவடி பெருமாள் கோவில் தெரு பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை, அருகே உள்ள வீட்டில் வசித்த சுமதி பார்த்துள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்து தனது மகன் மற்றும் வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த தீர்த்தமலை என்ற ஏடிஎம் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சுமதி மற்றும் அவரது மகன் செந்திலை அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்து, வெகுமதி அளித்தார்.

Comment

Successfully posted