வால்பாறையில் தங்கும் விடுதி, ரிசாட்களில் காவல் துறையினர் தீவிர சோதனை

May 15, 2019 01:16 PM 142

கோவை மாவட்டம், வால்பாறையில் அனுமதி இல்லாமல் செயல்படும் தங்கும் விடுதிகள், மற்றும் ரிசாட்கள் குறித்து காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறை மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அரசு அனுமதி பெறாமல் தங்கும் விடுதிகள் மற்றும் ரிசாட்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஒருசில தங்கும் விடுதிகள் மட்டுமே அரசு அனுமதி பெற்று செயல்படுவது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளனர்.

Comment

Successfully posted