”பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்”-மாணவ, மாணவிகள் சாலை மறியல்

Dec 01, 2021 05:34 PM 2070

சென்னை கோயம்பேட்டில், தனியார் கல்லூரி மாணவ மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் ஆங்கிலதுறை பேராசிரியர் தமிழ்செல்வன், இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவ, மாணவிகள் செவ்வாயன்று கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேராசிரியரை பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ்செல்வனை கைது செய்ய வலியுறுத்தியும், பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யவும் கோரி இரண்டாவது நாளாக கோயம்பேடு மேம்பாலம் அருகே மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பேராசிரியர் தமிழ்செல்வனை கைது செய்தனர்.


Comment

Successfully posted