மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

Oct 15, 2018 12:09 PM 532

பெரம்பலூர் அருகே கோனேரி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு கோனேரி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று இரவு கோனேரி ஆற்றுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ரஞ்சன்குடி பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பிரதீப் நடராஜன், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பிரம்மதேசம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட இளவரசன் என்பவரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரி மற்றும் 2 பொக்ளின் இயந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது தப்பியோடிய மூர்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted