குழந்தை கடத்தல் சந்தேகம் - 2 பேர் கைது

Oct 14, 2018 01:03 PM 1605

குழந்தை கடத்தல் பீதி காரணமாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சுற்றித் திரிந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற அரசு பொது மருத்துவமனைக்கு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அஸ்வினி மற்றும் சல்மான் ஆகிய இரண்டு பேர் அப்பகுதியில் நோட்டமிடுவதும் சுற்றித் திரிவதுமாக இருந்தனர். இவர்களை கண்ட பெற்றோர் அவர்களிடம் விசாரித்த போது இருவரும் முன்னுக்குப் பின் முரணான பேசினர்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted