பள்ளிக்கரணை அருகே பெண் கொலை: வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரா?

Jan 29, 2019 04:03 PM 243

பள்ளிக்கரணை அருகே குப்பைக் கிடங்கில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் கை, கால்கள் குறித்த தகவல்கள் கிடைக்காததால், அண்டை மாநிலங்களில் காணாமல் போன பெண்களின் தகவலகளை சேகரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் ஒரு கை மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. வலது கையில் பட்டாம்பூச்சி, டிராகன் மற்றும் சிவன் பார்வதி உருவங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை கொண்டு சமூக வளைதளங்கள் மற்றும் ஊடகங்களில் போலீசார் போஸ்டர்களை வெளியிட்டும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காணாமல் போன 35 வயது முதல் 45 வயது வரையிலான காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை சேகரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Comment

Successfully posted