காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்

Jul 04, 2019 07:24 PM 247

இருசக்கர வாகனம் ஓட்டும் போது காவல்துறையினரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து விதிகளை காவல்துறையினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவை மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள அவர், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், ஹெல்மேட் அணியாமல் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீதான அபராதம் மற்றும் தண்டனையை கடுமையாக்கி உத்தரவிட்டுள்ள நிலையில், டி.ஜி.பி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted