அரியமங்கலம் அருகே போலீசை அரிவாளால் தாக்கிய மர்மநபர்

Jul 12, 2019 08:37 PM 57

அரியமங்கலம் அருகே கையில் மீன் வெட்டும் அரிவாளைக் கொண்டு மர்மநபர், போலீசை ஆக்ரோசமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன...


தஞ்சை மாவட்டம் அரியமங்கலம் உக்கடைப் பகுதியில் மீன்கடை நடத்தி வரும் இஸ்மாயில், கடந்த 8-ம் தேதி, அருகிலுள்ள கடை உரிமையாளர்களிடம் தனக்குச் செலவுக்குப் பணம் தரச்சொல்லி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இத்தகவலை அறிந்து அப்பகுதிக்குச் சென்ற காவலர் ஹரிஹரன், சம்பவ இடத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்ட இஸ்மாயிலை விரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இஸ்மாயில் காவலர் ஹரிஹரனை, மீன் வெட்டும் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கினார். இதில் ஹரிஹரனுக்கு தலை, கை ஆகிய இடங்களில் வெட்டு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, இஸ்மாயிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, இஸ்மாயில் மீது காந்தி மார்க்கெட், அரியமங்கலம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted