காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வாய்மொழி உத்தரவு

Apr 13, 2019 06:22 PM 44

தேர்தலையொட்டி காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் கால டிஜிபி அசுதோஷ் சுக்லா, மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காவல்துறையில் பணியாற்றக்கூடிய உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரும் இரவு 12 மணி வரை பணியாற்ற வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையிலும், அரசியல் கட்சியினரின் பிரசாரம் ஓய்ந்த பிறகு, அந்தந்த பகுதிகளில் அமைதி நிலவும் வரையும் அனைத்து காவலர்களும் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாலையில் மூத்த அதிகாரிகளான கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comment

Successfully posted