வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளில் திமுகவினர் அடிதடி: பொள்ளாச்சி ஜெயராமன் குற்றசாட்டு!

Mar 30, 2021 11:03 AM 324

கோவை மாட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரதராஜன், நேற்று இரவு ஒக்கிலிபாளையம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது சில கருத்துகளுக்கு அப்பகுதியில் இருந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவருடன் வந்த திமுகவினர், அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிமுக கிளைச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான கிரி உட்பட அதிமுகவினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வி பயத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

 

Comment

Successfully posted