பொள்ளாச்சி விவகாரம்: தவறான தகவல்கள் பரப்பிய ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு

Mar 14, 2019 09:47 PM 1542

பொள்ளாச்சி விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பியதற்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்திருந்ததன் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையதளத்தில் போலியான ஆபாச படங்களை வெளியிட்டது, அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்ட முயற்சித்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் இந்த விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபாலை, வெள்ளிகிழமை சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கமளிக்குமாறு மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Comment

Successfully posted