வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரங்கள் குறித்து விளக்கம்

Mar 16, 2019 10:15 AM 79

மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மற்றும் வாக்கு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகமெங்கும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளை சேர்ந்த மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி மற்றும் வாக்கு இயந்திரங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சியும் விளக்கமும் அளிக்கப்பட்டது.

Comment

Successfully posted