கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

Mar 06, 2021 02:10 PM 2563

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக, பொன். ராதாகிருஷ்ணன் நிறுத்தப்படுவதாக, அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில், 1999ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியிலும், 2014ம்ஆண்டு கன்னியாகுமரி தொகுதியிலும், பொன் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted