94.71% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

Jan 12, 2020 10:27 PM 1179

பொங்கல் பரிசுத்தொகுப்பு, தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, 94.71 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, 1000 ரூபாயுடன் கூடிய கொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும், நியாயவிலைக் கடைகளில், தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத் தொகுப்பு பெற தகுதிவாய்ந்த 2 கோடியே 30 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை, 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள நபர்களுக்கு பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளும் படி குறுஞ்செய்தி மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளதாகவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், உடனடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment

Successfully posted