பொன்னமராவதி மோதல்: 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

Jun 13, 2019 11:34 AM 53

பொன்னமராவதி அருகே இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்னமராவதி அருகே செவலூரை சேர்ந்த மூவர் சென்று கொண்டிருந்த போது, அதில் ஒருவர் உடன் வந்த இருவரின் சாதி குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. இதில், காயமடைந்த இருவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சமுகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் 10 மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted