பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: சிபிசிஐடி

Mar 14, 2019 06:45 PM 155

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களோ தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து புகார் அளிக்கும் நபர்களின் விவரம், வெளியிடப்படாது என்றும், ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும், வழக்கு தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை 9488442993 என்று வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விவரங்களை அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் ஆபாச பட கும்பல் குறித்த புகார்களை அளிக்கலாம் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

Comment

Successfully posted