தெலுங்கில் பிரபல இயக்குநரான சேகர் கம்முலாவின் படத்தில் தனுஷ்?

Jun 18, 2021 04:38 PM 1544

தமிழ் தவிர, பாலிவுட், ஹாலிவுட் படங்களில் தடம் பதித்த தனுஷ், தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகரான தனுஷ், ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் அவர் நடிக்கவுள்ள நிலையில், தெலுங்கில் பிரபல இயக்குநரான சேகர் கம்முலாவின் படத்திலும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted