தபால் வாக்குப்பதிவு சீட்டு சமூக வலைதளங்களில் பரவிய விவகாரம்!- பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் கைது!

Mar 30, 2021 01:28 PM 972

தென்காசியில் தபால் வாக்குப்பதிவு புகைப்படம் முகநூலில் பரவியது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, தபால் வாக்குச் சீட்டை முகநூலில் பதிவிட்ட செந்தில்பாண்டியன் என்பவரை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவரது நண்பரின் மனைவியும் ஆசிரியருமான கிருஷ்ணவேணி தபால் வாக்கு செலுத்தியது தெரியவந்தது. கிருஷ்ணவேணி, தான் தபால் வாக்கு செலுத்தியதை மகனிடம் காண்பிக்க புகைப்படம் எடுத்ததும், அதனை அவரது கணவர் கணேச பாண்டியன் நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் தபால் வாக்கை பகிர்ந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணவேணி அவரது கணவர் மற்றும் செந்தில்பாண்டியன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Comment

Successfully posted