போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்

Jan 10, 2021 09:58 AM 8936

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருகிற 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted