நடிகைனா இப்படி தான் இருக்கனும்............!!!!!!!

Aug 16, 2019 05:15 PM 177


திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வரும் பிரணிதா, 2010 ஆம் ஆண்டு உதயன் என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆகினார். இந்த திரைப்படம் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்றாலும் , 2012 ல் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை நடிகை பிரணிதா கவர்ந்துள்ளார். தற்போது வட கர்நாடக பகுதியில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள சம்பவம் நாம் அறிந்த ஒன்றே....

இச்சம்பவத்திற்கு நடிகை பிரணிதா "pranitha foundation" என்ற பெயரின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஆட்டோ , டெம்போ இவற்றின் மூலம் வழங்கி வருகிறார். இந்த நற்செயலை அவரின் ரசிகர்கள் ”ரீலில் மட்டுமன்றி நிஜத்திலும் ஹீரோயின்” என்று நடிகை பிரணிதாவை சமூகவலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

 

Comment

Successfully posted