பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 12-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

Oct 10, 2020 05:35 PM 1261

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாம் வாரம் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏரிகள், குளங்கள் தூர்வாருதல், மழை-வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted