பெரம்பலூரில், சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதத்தில் படுகொலை!!

Jun 10, 2020 11:02 AM 1151

பெரம்பலூர் நகரில் சீட்டு விளையாட்டில் பணம் தர மறுத்ததால் ரவுடியை கழுத்து அறுத்து கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வீரமணிகண்டன், காய்கறி மார்கெட்டில் வேலை செய்து வந்தார். இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே வீரமணிகண்டன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பந்தயமாக பணம் வைத்து சீட்டு விளையாடியபோது தோல்வியடைந்த வீரமணிகண்டன் தான் தரவேண்டிய 5 ஆயிரம் பணத்திற்கு பதில் தனது செல்போனை ஆனந்த் என்பவரிடம் கொடுத்துள்ளார். செல்போன் வேலை செய்யதாததால் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை தரவேண்டுமென ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி இரவு வீட்டிருந்த வீரமணிகண்டனை அழைத்து சென்ற ஆனந்த், தனது நண்பர்களுடன் சேர்த்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். வழக்குத் தொடர்பாக ஆனந்த், பார்த்திபன், அய்யனார், கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted