இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு

Sep 07, 2019 03:20 PM 191

நிலவை ஆராயும் சந்திரயான்-2  திட்டத்திற்காக  உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிவருகிறது. அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முயற்சியின்போது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதில் சந்திரயான் 2 திட்டத்தின் விஞ்ஞானிகள் கடமையுணர்ச்சியுடனும் துணிச்சலுடனும் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சாதனையால் நாடே பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted