தேவையற்ற விவாதங்கள் நம்மை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது -குடியரசுத் தலைவர் உரை

Aug 15, 2018 08:17 AM 619

நாட்டின் 72வது சுதந்திர தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.  இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவுடன், சுதந்திர தினம் வருவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக அவர் தெரிவித்தார். காந்தி இந்தியாவின் அடையாளம் என்றும், அவரது சுதேசி கொள்கை இன்றைய காலகட்டத்திலும் பொருத்தும்படியாக உள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறினார். இதுபோன்ற நேரத்தில், சர்ச்சைக்குரிய விஷயங்களிலும், தேவையற்ற விவாதங்களிலும் நம்மை திசைதிருப்ப, அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். தனது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடனும், உண்மையுடனும் செய்யும் ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர போராட்ட மாண்புகளை கட்டிக்காப்பதற்கு சமம் என்று அவர் கூறினார்.

Comment

Successfully posted