சர்தார் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை

Oct 31, 2018 09:28 AM 419

சர்தார் படேலின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலின் 143-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி படேல் சவுக் என்ற இடத்தில் உள்ள படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

படேல் பிறந்தநாளை ஒட்டி ஒற்றுமை நினைவோட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted