அமெரிக்க அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து

Feb 25, 2020 10:09 PM 847

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்புக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், இருநாட்டு பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், ஏ.ஆர். ரகுமான் போன்ற பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted