வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் அஞ்சலி

Aug 17, 2018 09:56 AM 469

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வாஜ்பாயின் உடல் நேற்று இரவு கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரவு 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Comment

Successfully posted