பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம்

Feb 12, 2019 10:08 AM 102

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகை தர இருந்த தேதி மாற்றப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவும் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். இதேபோல் பிப்ரவரி 19ஆம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகைதர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதன்படி பிரதமர் மோடி மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Comment

Successfully posted